16 வயதுடைய எனது மகன் நகுலேஸ்வரன், பாடசாலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை விடுதலைப் புலிகள் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்கள். என மட்டக்களப்பு மாட்டம் முனைத்தீவு எனும் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கையில்….
பின்னர் யுனிசெவ், சர்வதேச செஞ்சிலுவைக்குழு. போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, போன்றோரிடம் முறையிட்டோம் எனது மக்கன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி அறிவியல் முகாமில் இருப்பாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்தோம்.
அப்போது எனது மகன் என்னிடம் சொன்னார்…
அப்பா என்னை விடமாட்டார்கள் எனக்கு 18 வயது முடிந்ததும் எங்களை யுத்தம் செய்ய அனுப்பி விடுவாங்கள் என கூறினார்.
அதன் பின்னர் எனது மகனின் தொடர்பு கிடையாது. பின்னர் எனது மகன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்து, என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment