18 Aug 2015

மட்டக்களப்பில் த.தே.கூ. 3 ஆசனங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வி.

SHARE

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்த்தலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாடவட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 127185 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 38477 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 32359 வாக்குகளைப் பெற்று, 1 ஆசனத்தையும் பெற்றுக்கெர்ணடுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32232 வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும் எந்தவித ஆசனத்தையும் பெறவில்லை.

இதேவேளை மட்டக்களப்பு மாட்டத்தில்போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை, எமது தேசிய முன்னணி அகிய கட்சிகள் மிக, மிகக் குறைவாக வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்துள்ளதோடு போட்டியிட்ட 30 சுயேட்சைக் குழுக்களும் படுதோலிவியைத் தழுவிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 48000 இத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று பிரதிக் கல்விப் பணிப்பளரான ஞா.ஸ்ரீநேசன் முதலிடத்திலும், ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் 38000 வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாமிடத்திலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் 33000 வாக்குகளுக்குமேல் பெற்று மூன்றாம் இடத்திலும், உள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டியிட்ட அலிசாஹிர் மௌலானவும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்எஸ்.அமீரலியும் வெற்றி பெற்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தநாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு) பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கோ.கருணாகரம், கு.சௌந்தராஜன், ஆகியோரும், (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) எம்.எல்.ஏ.எம்.ஹிபுல்லா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர சி.சந்திரகாந்தன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இ.சாணக்கியன், மற்றும்,  ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சோ.கணேசமூர்த்தி ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: