மட்டக்களப்புபுதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெறும் கணினிப்
பிரயோக உதவியாளர் (CAA – NVQ Level 3) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழில்நுட்பவியலாளர் ( ICTT - NVQ Level 4 ) கணினி வரையியல் வடிவமைப்பாளர்
(Computer Graphic Designer – NVQ Level 4), தையல்காரர் (Tailor NVQ Level 4) ஆகிய
பயிற்சிநெறிகள் தேசிய தொழில்தகமை (NVQ) முறைமையின் கீழ் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
தற்போது கல்லூரியின் சிறப்பான அடைவினையும், பயிற்சிநெறிகளின் அடுத்த
மட்டத்தினை (Diploma – NVQ Level 5) அடையும் நோக்கில் ISO 90001:2008, IWA2:2007 சர்வதேச
தரத்திற்கு அமைவாக தர முகாமைத்துவ முறைமையினை (Quality Management System) நடைமுறைப்படுத்தும்
செயற்பாட்டின் முதற்கட்ட தரஆய்வினை (Quality Audit) மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி
ஆணைக்குழுவில் (TVEC) அமர்த்தப்பட்ட ஆய்வுக்
குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரியின் இச் சிறப்பான செயற்பாட்டுக்கு வெளிநாட்டில் உள்ள
புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பும் அர்ப்பணிப்புடன் கல்லூரியின் வளர்ச்சிக்காக பணியாற்றுபவர்களின் சேவையினாலேயே குறுகிய காலத்தில் இவ் அடைவினை எட்டக்கூடியதாக
இருந்ததாகவும், அவர்களின் தொடர்ச்சியான உதவி இருந்தால் வடகிழக்கில் தொழில்நுட்ப தொழில்பயிற்சி வழங்கும் ஒரு தலைசிறந்த கல்லூரியாக
திகழந்து கல்லூரியின் தொலைநோக்கினை அடையக்கூடியதாக இருக்கும் என அதன் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கும் தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்பம் ( Dip in ICT - NVQ Level 5 ) அத்தோடு இப்பிரதேசத்தில் காணப்படும் தொழில் கேள்வியினை
கருத்தில் கொண்டு பயிற்சி முடிந்ததும் தொழில்வாய்ப்பினை பெற்று வருமானம் ஈட்டக்கூடிய
சில புதிய தெரிவு செய்யப்பட்ட பயிற்சிநெறிகளான முன்பள்ளி ஆசிரியை (Pre-School Teacher NVQ Level 4), தொழிற்சாலை தையல்
இயந்திர இயக்குனர் (Industrial Sewing
Machine Operator – NVQ Level 3) சிற்றுண்டி கேக் தயாரிப்பாளர் (Cake and
Short-eats maker) போன்ற பயிற்சிகளை ஆரம்பிக்கக்கூடிய தொழில்நுட்ப ஆளணி வளங்கள் உள்ளதாகவும்
க.பிரதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment