மட்டக்களப்பு மாவட்டம் தும்பங்கேணியில் அமைந்துள்ள மாதிரி விவசாயப் பண்ணையின் சுற்று வேலியின் ஒருபகுதியை வியாழக் கிழமை (16) அதிகாலை வேளையில் காட்டு யானை தாக்கி உடைத்துள்ளதாக போரதீவுப் பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டடுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.
இம்மாதிரி விவசாயப் பண்ணை தற்போது போரதீவுப் பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டடுறவுச் சங்கத்தினால் தற்போது கண்ணிக்கப்பட்டு வரப்படுகின்றது.
வியாழக் கிழமை அதிகாலை இப்பண்ணையின் வேலியின் ஒரு பகுதியினை உடைத்துக் கொண்டு காட்டு யானை உள்நுளைந்துள்ள போதிலும், பண்ணையிலுள்ள தென்னைமரங்களை தேசப்படுத்த வில்லை. இருந்த போதிலும், சுற்று வேலிக்காக சுமார் 10000 ரூபா வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெ.சிவபாதம் மேலும், தெரிவித்தார்
0 Comments:
Post a Comment