1 Jul 2015

மார்ச் 12 பிரகடனம்

SHARE
மார்ச் 12 பிரகடனத்திற்காக கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று (29) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றது. 

பெப்ரல் அமைப்பினால் மட்டக்களப்பு நகரிலும் காத்தான்குடி பிரதான வீதி உட்பட பல இடங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

சிறந்த தோர் அரசிலுக்காக எனும் இந்த மார்ச் 12 பிரகடனத்தில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடியிலுள்ள முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் இளைஞர்கள் என பலரும் கையொப்பமிட்டனர். 

இதன்போது குறித்த பிரகடனம் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டும் துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. 

அரசியல்வாதிகளுக்கு வேட்புமனு வழங்கும் போது கருத்திற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான அளவு கோல்களாக, குற்றவியல் சார்ந்த தவறொன்றிற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது இடை நிறுத்திய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படாத ஒருவராக இருத்தல் வேண்டும். 

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் குற்றவாளியாக்கப்படாத சமூக அங்கீகாரம் பெற்ற நன்னடத்தையுள்ளவராக தேர்தலில் போட்டியிடுபவர் இருத்தல் வேண்டும் என்பன போன்ற எட்டு விடயங்கள் இந்த மார்ச் 12 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதேசசபை அல்லது மாகாண சபை, அல்லது பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு வழங்கும் போது, இந்த பிரகடத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
SHARE

Author: verified_user

0 Comments: