2 Jul 2015

தேர்தலில் போட்டி இடுவது தொடர்பாக விஷேட குழு நியமனம் விரைவில் வேட்பாளர் தெரிவு பூ.பிரசாந்த

SHARE

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது தொடர்பாக வேட்பாளரர் தெரிவும்,தேர்தலில் போட்டி இடும் விதம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தேசிய அமைப்பாளர் பா.தவேந்திரராஜா தலைமையில் 5 பேர் கொண்ட விஷேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். 
 
29.06.2015ம் திகதி கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலமையில் வாழைச்சேனை வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி விஷேட குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில்  தமிழரின் இருப்புக்கள் மிக மோசமாக தள்ளாடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வேலைவாய்ப்பு,அபிவிருத்தி,நில,நிருவாக ஆக்கிரமிப்பு என்று தமிழர்களின் நியாயமான இருப்புக்கள் கூட மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் நிலையில் 2015ம் வருடத்திற்கான நாடாளுமன்றத் தேர்தல் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத் தமிழரின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதாக அமைந்துள்ளது.மாவட்ட அபிவிருத்திக் குழு தொடக்கம் மாகாண சபை செயலாளர்கள் வரை பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் கிழக்கு மாகாண தமிழர்கள் தீர்க்கதரிசனமாக முடிவுகளை எடுப்பது காலத்தின் தேவையாகும்.

2010ம் வருடம் தமிழர்களின் பிரதி நிதித்துவம் மட்டக்களப்பில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்த தீர்க்கமான முடிவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்றம் தெரிவாவதற்கு காரணமாக அமைந்தது.ஆளும் அரசின் பங்காளியாக இருந்த போதும் நாடாளுமன்றம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அபிவிருத்தி,நிதிப் புறக்கணிப்பு,நில ஆக்கிரமிப்பு,நிருவாக ஆக்கிரமிப்புக்களில் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளது.
 
தொடர்ந்தும் இந் நிலமையினை அனுமதித்தால் தமிழரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி விடும் எனவே தமிழ் மக்கள் விpடுதலைப் புலிகள் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகத் தீர்க்கமாக தமிழ் மக்களை நில,நிருவாக,பொருளாதார அபிவிருத்தி ரீதியாக பாதுகாப்பதற்கு பூரணத்துவமாக அற்பணிப்புடன் செயற்படக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்யவுள்ளதுடன் தெரிந்தவர்,பணம்படைத்தவர்,ஆசைக்காக அரசியலுக்கு வருபவர் என்ற வகையில் போலியான வேட்பாளர்களை தெரிவு செய்யாது உண்மையான சமூகத்தை நேசிக்கும் தமிழரின் உரிமை,அபிவிருத்தி என்ற இரு கண்களையும் சீராக பேணக்கூடிய அரசியல் தலைமைகளை தேர்தலில் களம் இறக்க தீர்மானித்துள்ளது.
 
சமூக சிந்தனையுடன் சேவையாற்றக் கூடிய இளைஞர்கள்,மகளிர்,புத்திஜீவிகள் என பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் வெளிப்படையான நேர்முக தேர்வுகள் மூலம் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கும், தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பதற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட தலைவர்கள்,பொதுச்சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும்; செயற்பாட்டை எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இவ் விஷேட குழு அறிக்கை சமர்ப்பிக்கும்; எனவும் குறிப்பிட்டார்.
 
SHARE

Author: verified_user

0 Comments: