மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று பெருமைமிக்க விஸ்ணு ஆலயங்களுள் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதான தீர்த்தோற்சவமானது இன்று (01) புதன்கிழமை காலை வேளையில் சூரிய பகவான் எழுந்தருள களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.
ஆலயத்தில் இருந்து பல கிலோமீற்றர் துரத்திலுள்ள களுவன்கேணி கடற்கரைக்கு சுவாமி அதிகாலை வேளையில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடற்கரையில் அமைக்கப்பட்ட மண்டபத்திலே விஸ்ணுவுக்கு விசேட ப+சைகள் நடைபெற்றதும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் சுவாமி கடலில் தீர்த்தம் ஆடியதை அடுத்து பக்தர்கள் அனைவரும் நீராடினார்கள்.
வந்தாறுமூலை விஸ்ணு ஆலய தீர்த்தம் வருடா வருடம் சூரிய பகவான் கடலின் அடியில் இருந்து உதித்துவரும்போது தீர்த்தாடுவது வழமை அதனால் தீர்த்தம் ஆடுவதற்கென அதிகாலை வேளையிலே கடற்கரையை சூழ்ந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருதைருவது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற விசேட நிகழ்வில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேக ப+சைகள் நடைபெற்றதும் ஸ்ரீ தேவி ப+தேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணுவுக்கு அபிசேக ப+சைகள் அனைத்தும் மகோற்சவ குருவான ஷப்தரிஷி இந்து குருபீடாதிபதி தேசமான்ய தேசப்பற்று வேதாகம வித்தியாபதி சாஹித்திய பாஸ்கரன் சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வர குருக்கள் உட்பட ஆலய பிரதம குரு விஸ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திர குருக்கள் அவர்களினாலும் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment