இன்று (18.07.2-15)திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலையில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின்( அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்) திருமலைமாவட்டநடுவப் பணியகத்தைதமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் திருமலை லட்சுமி நாராணயன் கோயில் உரிமையாளர் ராதா கிஸ்ணன் ஆகியோர் இணைந்து நடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
தொடர்ந்துதிருகோணமலைகடற்கரைவீதியிலுள்ளவெலிகடை தியாகிகள் மண்டபத்தில் திருகோணமலை மாவட்டதலைமைவேட்பாளரானஇரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் ஏனைய வேட்பாளர்களானசெல்வகுமார். கேதீஸ்வரன்,சந்திரகுமார், ஜீவேந்திரன், வாசுகி ஆறுமுகதாஸ், தங்கேஸ்வரன் ஆகியோரை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யம் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெரும் தொகையானமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment