16 Jul 2015

மட்டக்களப்பில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள்

SHARE

தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளை தேர்தல் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
 
மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
 
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் செயலகமும் தேர்தல் கண்காணிப்பு பிரிவும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றனர்.
 
தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக சுவரொட்டிகளை ஒட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளபோதிலும் மட்டக்களப்பு நகரில் உள்ள தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அருகிலும் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
 
தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் ஒட்டப்பட்டிருக்கும் அனைத்து தேர்தல் விளம்பரங்களும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
 
SHARE

Author: verified_user

0 Comments: