30 Jul 2015

த.தே.கூ ஆசனங்களை அதிகரிக்க வேண்டும்

SHARE

அனைவரும் யானை, வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகின்றேன், என தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். 


வாகரை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 



இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 




எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் முடிவானது நீண்டகாலமாக இம்மண்ணில் எது தமிழ் இனத்தின் உரிமைக்காக போராடிய எமது உறவுகளின் தியாகங்களின் முடிவை சர்வதேசத்தின் அனுசரணையுடன் பெறக்கூடிய சூழலை தரவல்லதாகும். 



இந்த வகையில் தமிழினத்தின் தலை விதியை நிர்ணயிக்கும் இத்தேர்தலில் இதற்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். 



எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களாகிய நாம் 75 வீதமாக இருக்கின்றோம், முஸ்லிம்கள் 24 வீதமாக இருக்கின்றனர். இவ்வேளை 5 ஆசனங்கள் மட்டக்களப்புக்கு உண்டு. 



இதில் குறைந்தது 4 ஆசனத்தையாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். அபிவிருத்தி, உறவுகள் என சிந்தித்து கொண்டு வெற்றிலை சின்னத்திலும், யானை சின்னத்திலும் வேட்பாளராக உள்ள தமிழர்களுக்கு தாங்கள் வழங்கும் வாக்குகள் அனைத்தும் தமிழர்களை பாராளுமன்ற பிரதிநிதியாக கொண்டு வராது என்பது கடந்த கால வரலாறுகள் காட்டுகின்றது, என்றார். 
SHARE

Author: verified_user

4 Comments:

Anonymous said...

நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624

Anonymous said...

ஐயா யோகேஸ்வரன்,

நீங்கள் உணவுண்டபின் இருதற்கு ஒரு ஆசனம் தேவைப்பட்டால், 4 என்ன 40தும் நான் வாங்கித்தருகிறேன். பாராளுமண்ற ஆசனங்களுக்கு ஆசைப்பட வேண்டம். அது மக்களின் அபிவிருத்தியில் அக்கறை உள்ளவர்கள் அமரவேண்டிய ஆசனம்.

அல்லது பூசை செய்வதற்கு ஒரு கோயில் கட்டித்தருகிறேன்.விருப்பமா?

படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோயில் என்பது போல் இருக்கிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.