30 Jul 2015

இளையோர்களின் ஆதர்ஷ நாயகன் அப்துல்கலாம் (கட்டுரை)

SHARE

ஒரு முறை வந்தால் கனவு இரு முறை வந்தால் ஆசை பல முறை வந்தால் இலட்சியம் இளைஞர்களே கனவு காணுங்கள் என்று உறங்கி கொண்டிருந்த இளைஞர்களின் உள்மனதுக்கு உத்வேகம் தந்த கலாம் காலம் திங்களோடு (27) முடிந்து போனது.
AJP என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்துல்கலாம் என்ற அக்கினிச்சிறகு நேற்றோடு பறந்து சென்றது.  1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் கடைக்கோடியான இராமேஸ்வரத்தில் பிறந்து இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாகியவர்.
இந்திய விஞ்ஞானிய வரலாற்றில் கலாம் பங்காற்றிய காலங்கள்jkg பொற்காலங்கள் என்றால் மிகையாகாது. நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அப்துல்கலாமின் ஆசை ஒன்றேயொன்று தான் அதாவது இந்தியா வல்லரசாக பயணிப்பதை பார்க்க வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் இல்லை. இளைஞர்கள் அந்த மாற்றத்தினை கொண்டு வரக் கூடியவர்கள் என முற்றாக நம்பினார். இளைஞர்களை ஊக்கப்படுத்தினார் குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

தன் பொன்மொழிகள் பலவற்றால் இந்திய இளைஞர்களை  உந்துதலுடன் எழச்செய்தார். தனக்கு குடும்பம் இல்லையென்றாலும் இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்தினையும் தனது குடும்பமாக பாவித்து வாழ்ந்த மாமனிதர். அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்ற இயற்பெயரை கொண்டு அனைவராலும் பொதுவாக டொக்டர் ஏபிஜே அப்துல் கலாம் (APJ Abdul Kalam) என்று அழைக்கப்படும் இளையோர்களின் ஆதர்ஷ நாயகன் அப்துல் கலாம், ஒரு ஏழ்மையான தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர்.

அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை ஜைனுலாபுதீன் இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தந்தை படகு சொந்தக்காரராகவும் தாய் அஷியம்மாள் இல்லத்தரசியாகவும் இருந்தனர். மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்ப வருமானத்துக்காக சிறிய வயதிலேயே சின்ன சின்ன வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர். இந்திய தொலைக்காட்சியொன்றின் நேரடி நிகழ்ச்சியில் பங்குபற்றி கருத்து தெரிவித்த அப்துல் கலாம், தனது பல்வேறு அனுபவ பாடங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

abdul kalam 1அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, எனது அப்பாவின் பல வார்த்தைகள் என்னுடன் தற்போது வரை வழிகாட்டல்களாக இருந்துள்ளன என தெரிவித்துள்ளார். அவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் விளையாட்டாக ஒரு கேள்வி கேட்பார் 'சேர் நீங்க சிறு வயதிலிருந்தே சாதுவான பிள்ளையாக இருந்திருப்பீர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.. இருந்தாலும் கேட்கிறேன் நீங்கள் சிறுவயதில் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கின்றீர்களா என்று?" அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் வாங்கியிருக்கனே நிறையவே வாங்கியிருக்கேன் எனக்கூறி அச்சந்தர்ப்பத்தினையும் நினைவு கூர்ந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயதாகியது. அப்பொழுது ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார். ஊரிலுள்ள ஒருவர் தாம்பாளத்தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார். நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால், அவரிடம் சென்று அதை வைத்து விட்டு செல்லுங்கள் நான் அப்பாவிடம் வந்தவுடன் சொல்கிறேன் என்றேன். அம் மனிதரும் அவ்வாறே செய்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அப்பா எனக்கு சளாரென்று அடித்தார். பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார்.

அதில் அவர் திருக்குர்றானை மேற்கோள் காட்டி, பரிசுப் பொருளாக யார் கொடுத்தாலும் வாங்கக்கூடாது. அது பாவம், வேறு எதையோ எதிர்பார்த்து வருவதே பரிசு என்றார். அத்துடன் இறைவன் ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கின்றார் என்றால் அவருக்கான அனைத்தையும் கொடுத்து விடுகிறார் என்று அர்த்தம். அதையும் விட மேலாக மனிதன் வேறு ஏதாவது எடுத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயம் என்று எனது தந்தை சொன்ன அந்த அறிவுரை இன்று வரை என் வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் விமானப் பொறியியல் படிப்பில் சேரும் போது போதுமான பணம் தன்னிடம் இருக்கவில்லை, ஆனால் எப்படியாவது சேர்ந்து படித்துவிட வேண்டும் என்ற பேரவா இருந்தது. இதையறிந்த எனது சகோதரி தனது தங்கச் சங்கிலி வளையல்களை விற்று எனது படிப்புக்கு வித்திட்டவர். அவர்களது (குடும்பத்தினரது) நம்பிக்கை எனது உந்துதலுக்கு மேலும் சக்தியாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். பாடசாலைக் காலங்களில் அனைத்து பாடங்களிலும் சராசரியான விருப்பத்தினையும் ஈடுபாடுகளையும் கொண்டிருந்த கலாம் கணிதத்துறையில் மட்டும் அளவற்ற ஈடுபாட்டினையும் விருப்பத்தினையும் செலுத்தி வந்துள்ளார்.

abdul kalam 2ராமநாதபுரம் பாடசாலையில் தனது கல்வியை முடித்த இவர் திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் கல்வியை தொடர்ந்து 1954 ஆம் ஆண்டில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியல் பட்டத்தினையும் பெற்றார். அதன் பின்னர் இயற்பியலில் அதிக ஈடுபாடு கொண்டிராத கலாம் நான்கு வருடம் இயற்பியல் தொடர்பில் படித்து விட்டோமே என்று சிறியதாக மனம் வருந்தியுள்ளார். அதன் பின்னரும் மனம் தளராமல் 1955 ஆம் ஆண்டிலேயே மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் இணைந்து விண்வௌி பொறியியல் பட்டப்படிப்பினை தனது முழு ஈடுபாட்டுடன் கற்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார்.

படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் விண்வௌி பட்டப்படிப்பு தொடர்பான ஆராய்ச்சி செயற்திட்டம் செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கலாமிற்கு ஏற்பட்டது. ஆயினும் கொடுக்க வேண்டிய காலத்திற்கு மூன்று நாடகளேயிருந்த நிலையில் கலாமின் செயற்திட்ட வழிகாட்டல்  ஆசிரியர் செயற்திட்ட முன்மாதிரியை வழிமொழியுமாறு கேட்டுள்ளார். அதன் போது கலாம் அவ்வேலையில் இன்னும் ஈடுபாட்டுடன் ஆரம்பிக்கவில்லை என்பதையறிந்து அவர் கலாமிற்கு திட்டியுள்ளார். அத்துடன் இரண்டு தினங்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்றும் மிரட்டினார்.

அதன் பின்னர் இரவு பகலாக செயற்திட்டத்தினை செய்து முடித்தார் கலாம். ஆயினும் செயற்திட்டத்தினை சமர்ப்பிக்கும் இறுதி நாளில் அனைத்து மாணவர்களும் தமக்கான திட்டங்களை சமர்பிக்க அந்நேரத்தில் அப்துல் கலாமும் தனது திட்டத்தினை சமர்ப்பித்தார். சமர்ப்பித்தது மட்டுமன்றி அனைவரது செயற்திட்டங்களிலும் பார்க்க திறமையானதும் அறிவியலில் பெறுமதியாகவும் விளங்கிய திட்டத்தினை கண்டு வழிகாட்டல் ஆசிரியர் தன்னையே மெய்மறந்து கலாமை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் "நான் உனக்கு அதிக பளு கொடுத்து மிக கஷ்டமான காலக்கெடுவை விதித்தேன்." எனவும் கூறினார்.

1964 ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின்hjhk சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று நான் எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று கலாம் தன்னுடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இங்கு தனது கருத்தை பதிவு செய்த கலாம், இவ் அனர்த்தம் இடம்பெறும் போது நான் கல்லூரியில் இருந்தேன். அன்றைய தினம் எனது மைத்துனன் (அக்காவின் கணவர்) இவ்வாறு ஒரு அசம்பாவிதம் எமது ஊரில் நடைபெற்று விட்டது. உனது தாய் தந்தையர் உன்னை உடனடியாக பார்க்க வேண்டும் என பிரியப்படுகின்றனர் என தொலைபேசியினூடாக தெரிவித்தார். அப்போது எனக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்ற அவா இருந்தாலும் மாதக் கடைசி என்றமையால் கையில் பணம் இருக்கவில்லை.

அப்போது எனக்கு மிகவும் பிடித்ததும் எனது பேராசிரியரிடமிருந்து பரிசாக கிடைத்ததுமான புத்தகம் ஒன்று இருந்தது. அது அக்காலத்தில் 55 களில் 400 ரூபா பெறுமதி. எனக்கு வேறு வழிகள் ஏதும் இருக்கவில்லை. ஆகவே புத்தகத்தினை விற்று வரும் பணத்தில் ஊர் செல்வதாய் எண்ணி கடைக்கு சென்றேன். அந்த கடைக்காரர் என்னை பார்த்து விட்டு புத்தகத்தினை விற்று பணம் வாங்க வந்திருக்கிறாயே உனக்கு ஏன் பணம் என்று கேட்டார். நானும் நடந்ததை சொன்னேன். அதனை செவிமடுத்த அவர் எவ்வளவு பணம் வேண்டும் என்றார். நான் 60 ரூபா என்றேன். உடனே என்னிடம் 60 ரூபாயை கொடுத்து இந்தப்புத்தகம் என்னிடமே இருக்கும். பணம் எப்பொழுது கிடைக்கிறதோ பணத்தை செலுத்தி புத்தகத்தினை எடுத்து செல் என்று என்னிடம் குறிப்பிட்டார். அதைப் போலவே நானும் செய்தேன் என கலாம் சிலிர்ப்புடன் கூறி நினைவு கூர்ந்தார்.

சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (MIT) சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (Defence Research and Development Organisation - DRDO) சேர்ந்தது குறித்து ஒரு வித அதிருப்தியுடன் இருந்தார்.

பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (Satellite Launch Vehicle) (launcher) (S.L.V - III எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ். எல். வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 இல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள் எஸ். எல். வி திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய விண்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

dream1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் (NASA's Langley Research Center in Hampton), வர்ஜீனியாவில் (Virginia) லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம் (Goddard Space Flight Center in Greenbelt), மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் (Maryland and Wallops Flight Facility),  அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். 1970 லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ். எல். வி மற்றும் எஸ். எல். வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.

கலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான "புன்னகைக்கும் புத்தன்" (Smiling Buddha) திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். 1970 இல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை ஆகும். 1970 களில், கலாம் வெற்றிகரமான எஸ். எல். வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் (ballistic) தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார்.

மத்திய அமைச்சரவை மறுத்த போதிலும் பிரதமர் இந்திரா காந்தி தனது தன்னதிகாரம் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஒதுக்கினார். கலாம் மத்திய அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் முக்கியப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் கௌரவத்தால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி,எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.

ஆர் வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி (Agni) இடைநிலை தூர ஏவுகணை , ப்ரித்வி (Prithvi) தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக விமர்சிக்கப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

abdul kalam 3ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II (The Pokhran-II) அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், ஆர் சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானியாக உயர்த்திக்காட்டியது.

1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான (cardiologist) டொக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் (coronary stent), உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" ("Kalam-Raju Stent) என பெயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது.

தன்னுடன் பணிபுரிபவர்கள் மீது எப்போதும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார் அப்துல் கலாம். ஒருமுறை, கலாம் உடன் பணிபுரிந்தjhghfgh ஒருவர் தனது குழந்தைகளை ஓர் திருவிழாவிற்கு அழைத்து செல்வதாய் வாக்களித்திருந்தார். ஆனால், வேலை நிமித்தம் காரணமாக அவர் செல்ல மறந்துவிட்டார். கடைசி தருணத்தில் நினைவு வந்து வீட்டிற்கு சென்ற போது தான் தெரிந்தது, முன்னரே சென்ற கலாம், அவரது குழந்தைகளை, திருவிழாவிற்கு கூட்டி சென்று விட்டார் என்று. இவ்வாறு எந்தப் பாகுபாடுமின்றி தன்னுடன் வேலை செய்பவர்கள் மீது அளவற்ற பிரியத்தை வைத்திருந்தவர்.

அப்துல் கலாம் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்கு பிறகு பணியாற்றினார். அவர் 2002 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 107,366 வாக்குகளை பெற்ற லட்சுமி சாகலை, 922,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஜூலை 25 ஆம் திகதி 2002 ஆண்டு முதல் 2007 வரை பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு ஜூன் 10 இல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது.

சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார். 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அவையுடன் பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு வெற்றியென்ற முடிவான கூற்றுடன் நடந்தது. அதன் பின்னர் வாக்களிப்பு பணியினை தொடர்ந்து அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார்.  கலாம் அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார்.

அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றhvwbl5559 திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கெளரவ டொக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் .

குறிப்பாக 2014 ஆம் ஆண்டில் அறிவியல் டொக்டர் பட்டம், 2012 இல் சட்டங்களின் டொக்டர் பட்டம், 2010 இல் பொறியியல் டாக்டர் பட்டம், 2008 இல் பொறியியல் டாக்டர் பட்டம், 2007 இல் அறிவியல் கௌரவ டாக்டர் பட்டம் என்பவற்றினை குறிப்பிடலாம். இந்திய அரசு கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் கொடுத்துக் கௌரவித்தது. இது மட்டுமின்றி, ராமானுஜன் விருது, இந்திரா காந்தி விருது, வீர் சவர்கர் (Veer Savarkar) விருது, கிங் சார்லஸ் II பதக்கம் என பல வகைகளில் கௌரவம் செய்யபட்டுள்ளார் கலாம்.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.

கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.  குடியரசு தலைவராக இருந்த போது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு தான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிக மிக்கியமான பங்குவகிக்கும் என கூறியதோடு மட்டுமில்லாமல், மாணவர் மத்தியில் ஓர் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிறைய உரையாற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது மாணவர்கென்று ஓர் தலைவர் இருக்கிறார் என்றால் அது எப்போதும், அப்துல் கலாம் தான். கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டு எம். டிவி-யின் யூத் ஐகான் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவரது அறிவியல் அறிவை போற்றும் வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம் செய்துள்ளது. இவர் சுவிட்சர்லாந்து சென்று வந்த நாளை, அவர்கள் அந்நாட்டின் அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்தியா 2020 இல் வல்லரசு நாடாக மாறும் என்று, நீண்ட நாள் வெறும் கனவாக எந்த தூண்டுதலும் இன்றி இருந்த ஓர் விஷயத்திற்கு, மாணவர் மற்றும் இளைஞர்கள் மூலம் உயிரோட்டம் அளித்து, பெரும் விதையை ஒவ்வொரு இந்தியன் மட்டுமன்றி உலகளாவிய இளையோர் மனதிலும் விதைத்தவர் அப்துல் கலாம்.

கனவு காணுங்கள் திட்டமிடுங்கள் செயற்படுங்கள் என்று அனைத்து மாணவர்களுக்கும் இளையோர்களுக்கு எடுத்துரைத்த அவர், பல பொன் மொழிகளை விடுத்துள்ளார். தூங்கும் போது காண்பதற்கு பெயர் கனவல்ல, தூங்க விடாமல் சாதிக்க துடிக்கும் செயலுக்கு பெயரே கனவு. கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை கனவு காண்பவர்கள் மட்டுமே தோற்கின்றனர்.

Dr. Abdul kalamஉன் கைரேகையை பார்த்து எதிர்காலத்தினை நிர்ணயித்து விடாதே ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு. ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். என்ற பல பொன் மொழிகள் மட்டுமன்றி இளையோர்கள், மாணவர்கள், சாதிக்க துடிப்பவர்கள், என அனைத்து மக்கள் மத்தியிலும் விடிவௌ்ளியாக திகழ்கிறார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நாட்டிற்கு நல்ல தலைமகனாய் எதிர்கால இந்தியாவிற்கு நல்லதொரு வழிகாட்டியாய் குடும்பத்துக்கு நல்ல குணம் கொண்ட தம்பியாய் என அத்தனை முகங்களிலும் பளிச்சிட்டார் கலாம். எளிமை கொண்ட கலாமின் வாழ்வு உயர எட்டப் போகும் அனைத்து இளைஞர்களுக்கும் வழிகாட்டியாய் அமையும்.


உலகத்திலுள்ள அனைவராலும் அணு அணுவாய் ரசிக்கப்பட்ட விரும்பப்பட்ட அணுநாயகன் நம்மை விட்டு புறப்பட்டு விட்டார். ஆனால்  நினைவுகளையும் அறிவுச்சுரங்களையும் எப்பொழுதும் தனது மாணவச் செல்வங்களுக்காக விட்டு விட்டே அவரது பயணத்தினை மேற்கொண்டார். nl
SHARE

Author: verified_user

0 Comments: