30 Jul 2015

வேட்பாளர் சோ.கணேசமூர்தியுடனான செவ்வி

SHARE

இலங் கையில் மிக நீண்ட கால மாக புரை­யோ டிப் போ யுள்ள இனப் பி ரச் சி னைக்கு நிரந் தர தீர் வினை வழங்கி ஐக் கிய இலங்­கைக்குள் சகல இன மக் களும் நிம் ம தி­யாக வாழும் சூழலை உரு வாக்கி,தனி மனித அபி வி ருத் தியை சகல துறை க­ளிலும் ஏற் ப டுத் து வதே ஐக் கிய தேசி யக்­கட் சியின் இலக் காகும். எனவே இந்­நாட்டில் வாழும் சகல இன மக் களும் ஊழல் மோச டி யற்ற சிறந்த நல் லாட்சி முறையை ஏற் ப டுத்த ஐக் கிய தேசி யக் ­கட் சிக்கு வாக் க ளிக்க வேண்டும்.

இவ் வாறு முன்னாள் பிரதி அமைச் சரும் ஐக் கிய தேசி யக் கட் சியின் சார்பில் மட்­டக் க ளப்பு மாவட் டத்தில் போட் டி யிடும் வேட் பா ள ரான சோ.கணே ச மூர்த்தி  அளித்த செவ் வியில் குறிப் பிட்டார்.

அவர் தனது செவ் வியில் மேலும் குறிப்­பிட் டுள் ள தா வது,

கேள்வி-: முன்னாள் ஜனா தி பதி சந் தி ரிகா பண் டா ர நா யக்க குமா ர துங்க ஜனா தி ப தி­யா க வி ருந்த வேளையில் ஸ்ரீலங்கா சுதந் திர கட் சியின் அங் கத் துவம் பெற்று பொது ஜன ஐக் கிய முன் ன ணியின் சார்பில் தேசி யப் பட் டியல் மூல மாக பாரா ளு மன்றம் சென்று, பின்னர் இந்த முன் ன ணியின் சார்பில் பொதுத் தேர் தலில் போட் டி யிட்டு வெற்றி பெற்று பிர தி ய மைச் ச ராக பதவி வகித்த நீங்கள் ஏன் திடீ ரென ஐக் கிய தேசி யக் கட் சியில் இணைந்து போட் டி யிடக் காரணம் என்ன?

பதில்-: இன வா த மற்ற அர சியல் தலை மை யாக மிளிர்ந்த முன்னாள் ஜனா தி பதி சந் தி ரிகா பண் டா ர நா யக்க குமா ர ண துங் கவின் கொள் கை களால் ஈர்க் கப் பட்டு அவரின் தலை மையின் கீழ் செயற் பட்டு போர் அவ லங் களால் பாதிக் கப் பட்ட மட்­டக் க ளப்பு மாவட்ட மக் க ளுக்கு என்னால் இயன் ற வரை முடி யு மான சேவை யினை செய்து மன நி றைவு கண்டேன்.

இந் நி லையில் மஹிந்த ராஜ பக் ஷவின் ஆட் சிக் கா லத்தில் தமிழ், மக் க ளுக்கு குறிப் பாக சிறு பான்மை இன தமிழ், முஸ்லிம் மக் க ளுக்கு பாரிய அநீதி இழைக் கப்­பட் டது. இதனை முழு உலகும் அறியும்.

இதன் பின்னர் இவ் வாண்டு ஜன வரி மாதம் 08ஆம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற் பட்டு நல் லாட்சி உத ய மா னதை தொடர்ந்து போரி னாலும், இயற்கை அனர்த் தங் க ளாலும் பாதிக் கப் பட்ட எமது மட் டக் க ளப்பு மாவட் டத்தில் வாழும் அபி வி ருத் தியில் பின் ன டைவை சந் தித்த தமிழ் மக் க ளுக்கு சேவை யாற்ற ஒரே வழி, ஐக் கிய தேசி யக் கட் சியின் தலைவர் ரணில் விக் கி ர ம சிங் கவின் தலை­மையில் இணைந்து சேவை யாற்றுவதே. அதற்காக இந்த முடிவை எடுத்தேன்.

கேள்வி-: பிர தமர் ரணில் விக் கி ர ம சிங் கவின் தலை மை யி லான ஐக் கிய தேசி யக்­கட் சியில் இணைந்த போது ஏதா வது உடன் ப டிக்கை செய் துள் ளீர் களா?
பதில்-: ஆம், தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் தேசி யப் பி ரச் சி னைக் கான தீர்வு தொடர்­பா கவும், இவை தவிர மட் டக் க ளப்பு மாவட் டத்தின் தமிழ் பிர தேச அபி வி ருத்தி தொடர் பா கவும் பிர தமர் ரணில் விக் கி ர ம சிங் க வுடன் விரி வாகப் பேசி பல இணக்­கப் பாட் டினை கண் டி ருக் கின்றேன். 

இதன் படி இனப் பி ரச் சினை என்ற பதத் தினை இல் லாமல் செய்து சகல இன மக் களும் திருப்தி அடையும் தீர்வை தமது ஆட் சிக்­கா லத்தில் செய்து தரு வ தாக பிர தமர் ரணில் விக் கி ர ம சிங்க உறு தி மொ ழி ய ளித்­துள்ளார். மேலும், மட் டக் க ளப்பு மாவட்ட தமிழ் மக் களின் நலன் கருதி விசேட அபி வி ருத்தி செய ல ணியை ஏற் ப டுத் த வுள் ள தா கவும் நான் பாரா ளு மன் றத் திற்கு தெரிவு செய் யப் பட்டால் அமைச் ச ரவை அந் தஸ் துள்ள அமைச்சு பொறுப்பை வழங்கி மட்டு. மாவட்ட அபி வி ருத்தி ஒருங் கி ணைப் புக் குழுத் தலை வ ராக நிய மிக்­கவும் வாக் கு றுதி அளித் துள்ளார்.

கேள்வி- தமிழ் மக் களின் நலன் சார்ந்த விட யங்கள் குறித்து ஐ.தே.க.தலை மை­யுடன் பேசி யுள் ளீர் களா?

பதில்- இவ் வி டயம் குறித்து விரி வாகப் பேசி யுள்ளேன்.

பெய ர ளவில் இயங்கும் மாகா ண சபை முறை மையை வலு வுள் ள தாக்கி, காணி, பொலிஸ் அதி கா ரங்கள் வழங் கப் ப ட வேண்டும்.

ஆளு நர் க ளுக் குள்ள அதி கா ரங் களை குறைத்து, மாகாண முத ல மைச் சர் க ளுக் கான அதி கா ரங்கள் அதி க ரிக் கப் ப ட வேண்டும்.

மாகாண சபை களின் மூலம் கல்வி நிலையில் மாற்றம் கொண்டு வரும் அதி காரம், தமிழ் நாட்டில் உள் ளது போல் பல் க லைக் க ழக கல் லூ ரி களை நிறுவும் அதி காரம் மாகாண முத ல மைச் சர் க ளுக்கு வழங் கப் ப ட வேண்டும்.

அதி காரப் பர வ லாக்கல் என் பதை விட்டு விட்டு இனப் பி ரச் சி னைக்கு சமஷ்டி அடிப்­ப டையில் தீர்வு ஐக் கிய இலங் கைக்குள் வழங் கப் ப ட வேண்டும். ஒரு நாடு, இரு தேசம் என்ற நிலை உரு வா கினால் இனப் பி ரச் சினை இல் லாமல் போய் விடும் என்­ப தையும்,
பண் டா-  – செல்வா ஒப் பந்தம் போன்று முன்னாள் ஜனா தி பதி சந் தி ரிகா அம்­மையார் கொண்டு வர வி ருந்த நீலன் திருச் செல்வம் தயா ரித்த நல் லி ணக்க சபை தீர் மா னங் களை நடை மு றைப் ப டுத்த வேண் டு மெனக் கோரிக் கை களை முன்வைத் துள்ளேன்.

கேள்வி-: தேசி யக் கட் சி களின் வேட் பா ளர் க ளாக தமி ழர்கள் போட் டி யி டு வ தனால் தமிழ் பிர தி நி தித் துவம் சித ற டிக் கப் ப டு வ துடன், தமி ழர்கள் பெறும் வாக் கு க ளினால் மாற்று இனத் த வர்கள் எம்.பி.யாகும் வாய்ப்பு உள் ள தாக கூறப் ப டு வது பற்றி என்ன கூறு கின் றீர்கள்?

பதில்-: பொருத் த மான கேள்வி இது. தமி ழர் களின் உரிமை கட்சி என்று கூறி பாரா­ளு மன்றம் சென்ற தமிழ் அர சி யல் வா திகள் பாரா ளு மன்ற தேர் தலின் போது உரிமை பற்றி ஆவே ச மாக பேசு வதும், தேர்தல் வெற் றியின் பின்னர் பெட்டிப் பாம்­பாகி விடு வதும் வர லாறு, இவர்கள் தமது சொந்த வாழ்வை வளப் ப டுத் தி னார்கள். பொது மக் க ளைப் பற்றி சிந் திப் ப தில்லை.

 இதற்கு சிறந்த உதா ரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் போன்ற முஸ்லிம் கட் சிகள் உரிமை பற்றி பேசிக் கொண்டு தமது சமூ கத் திற்குச் செய்த சேவை களில் துளி யேனும் இவர் களால் செய்ய முடிந்­ததா? என்னைப் போன் ற வர்கள் பாரா ளு மன்றம் செல்லும்போது எமது மக் களின் உரி மைகள் பற்றி நேர டி யாக இடைத் த ர கர்கள் இன்றி பேசு வ துடன் அபி வி ருத் தி­களை நேர டி யாகப் பெற்று வந்து பாதிக் கப் பட்ட தமி ழர் களின் துயர் துடைப்போம். மாறாக சமூ கத்தை காட் டிக் கொ டுக் க மாட்டோம். தமிழ்த் தே சியக் கூட் ட மைப்பின் சார்பில் தமிழர் தெரி வா வதால் மட்டும் இனப் பி ரச் சி னைக்குத் தீர்வு காண பேரம் பேசப் படும் என் பதை விடவும், ஐக் கிய தேசி யக் கட் சியின் சார்பில் தமி ழர்கள் தெரி­வாகிச் சென்றால் மூக்கை வளைத்து தொடாமல், நேர டி யாகத் தொட முடியும்.

கேள்வி-: தமிழ் அர சியல் கைதி களின் விடு தலை தொடர்பில் ஏதா வது முயற்சி செய் துள் ளீர் களா?

பதில்-: 2009ஆம் ஆண்டு போர் முடி வுக்கு கொண் டு வ ரப் பட்ட கையோடு சகல தமிழ் அர சியல் கைதி களும் பொது மன் னிப்பு வழங் கப் பட்டு விடு தலை செய் யப்­பட் டி ருக்க வேண்டும். இத னை யிட்டு நான் ஐ.தே.கட்சி தலை மை யுடன் பேசி­யுள்ளேன். தமிழ் அர சியல் கைதிகள் தொடர் பான வழக் குகள், குற் றச் சாட் டுக்கள் என் பன உட ன டி யாக வாபஸ் பெறப் பட்டு அவர் க ளுக்குப் பொது மன் னிப்பு அளிக்­கப் ப ட வேண்டும்.

இன வெ றிக்கு எதி ராகப் போரா டிய உல கத் த லை வ ரான நெல்சன் மண் டேலா தென் னா பி ரிக் காவில் அர சியல் கைதி க ளுக்கு பொது மன் னிப்பு வழங்கி விடு தலை செய் ததைப் போன்று இலங் கை யிலும் இடம் பெற வேண்டும் என் பது எனது கோரிக் கை யாகும்.

கேள்வி-: மிகக் குறு கிய காலம் பிர தி ய மைச் ச ரா க வி ருந்த நீங்கள், மட் டக் க ளப்பு மாவட்ட அபி வி ருத் திக்கு ஆற் றிய சேவை என்ன?

பதில்-: மட் டக் க ளப்பின் வர லாற்றை எடுத்து நோக்கும் போது, ஆளும் கட் சி களில் இணைந்து பணி யாற் றிய தமி ழர் களால் தமிழ் பகு தி களில் பாரிய அபி வி ருத் தியை செய்ய முடிந் தது. இந்த வகையில் நல் லையா மாஸ்ரர், கே.டபிள்யூ. தேவ நா­யகம்,செல் லையா இரா ச துரை போன் ற வர் களைப் போன்று நானும் முடி யு மான சேவையை செய் துள்ளேன். இந்த வகையில் மட் டக் க ளப்பு தேசி யக் கல் லூ ரியை நிறுவி, முன் மா தி ரி யான கட் டட நிர் மாணப் பணி களை ஏற் ப டுத்தி கொடுத்­துள்ளேன்.மட் டக் க ளப்பு மண்ணின் மைந் த ரான பேரா சி ரியர் இரா ஜேந் தி ராவை கிழக்கு பல் க லைக் க ழக உப வேந் த ராக்கி, இங்கு மக ளி ருக் கான விடுதி,வசதி உட் பட பல கட்டட நிர் மாணப் பணி களை மேற் கொண்டேன். 

பட் டி ருப்பு மத் திய மகா வித் தி­யா ல யத்தை தேசியப் பாட சா லை யாக் கினேன். களு தா வளை மகா வித் தி யா ல­யத்தில் விஞ் ஞானப் பிரிவை ஆரம் பித்து வைத்தேன்.புதுக் கு டி யி ருப்பில் ஆயுர்­வேத வைத் தி ய சா லையை நிறு வினேன். மட் டக் க ளப்பு, களு வாஞ் சி குடி வைத் தி ய­சா லை களின் அபி வி ருத் திக் காக பாரிய பங் க ளிப்பை நல் கி யுள்ளேன். விபு லா னந்த இசை நடனக் கல் லூ ரியை கிழக்கு பல் க லைக் க ழ கத் துடன் இணைத்து சுவாமி விபு­லா னந்தா அழ கியற் கல்வி நிறு வ ன மாக்கி இங்கு பயின்று வெளி யே று ப வர்கள் பட்­ட தா ரி க ளாக வெளி யேற முயற்சி செய்து வெற்றி கண்டேன்.

கேள்வி-: எதிர் வரும் பாரா ளு மன்ற தேர் தலில் வெற்றி பெற்றால் நீங்கள் மட் டக் க­ளப்பு மாவட்ட அபி வி ருத்தி கருதி செய்ய எண் ணி யுள்ள கருமம் என்ன?

பதில்-: கடந்த கால போர் அவ லங் களால் பெரிதும் பாதிக் கப் பட்ட மாவட் ட மாக மட்­டக் க ளப்பு மாவட்டம் உள் ளது. ஆயி ரக் க ணக் கான வித வைகள், அங் க வீ னர்கள், மனக் காயம் அடைந் த வர்கள், வீடு களை இழந் த வர்கள், பொரு ளா தார வளம் குன்றி வாழ் ப வர்கள், தொழில் துறையை இழந்து வாழ் ப வர்கள், கல்வி வாய்ப்பை இழந் த­வர்கள், வேலை வாய்ப்பின்றி மன வி ரக் தி யுடன் வாழ்பவர்கள், முறையான வைத்திய சேவையின்றி வாழ்பவர்கள், போக்குவரத்து வசதிகள் இன்றி வாழ்பவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களின் வாழ்வில் புது வசந்தம் வீசுவதற்கான திட்டம் என்னிடம் உள்ளது.

 துறைநீலாவணை, தொடக்கம் வெருகல் வரையும் உள்ள மக்களின் காலடிக்குச் சென்று சேவையாற்றவுள்ளேன். அதிலும் குறிப்பாக பட்டிருப்பு, கல்குடா , மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் பல தேசியப் பாடசாலைகளை ஏற்படுத்தி மத்திய அரசின் உதவியை நேரடியாகப் பெற்றுக்கொடுக்கவுள்ளேன். போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, வாகரை உள்ளிட்ட பிரதேசங்களில் ஆதார வைத்தியசாலைகளை நிறுவ எண்ணியுள்ளேன். இம்மாவட்டத்தில் தொழில் பேட்டைகளை நிறுவி பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

இவை யாவற்றையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள எமது மாவட்ட தமிழ் மக்கள் "உரிமை” என்ற வெற்றுக்கோஷம் பேசுவோரை நிராகரித்து ஐக்கிய தேசியக்கட்சிக்கும், எனது விருப்பு இலக்கமாகிய எட்டாம் இலக்கத்திற்கும் வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். vk260715

SHARE

Author: verified_user

1 Comments:

Anonymous said...

https://www.facebook.com/pages/Somasundaram-Ganeshamoorthy/863770150338624?fref=ts
நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்