கரையோரப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வூட்டும் பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை (25) மட்டக்களப்பு லங்கா ரெஸட் இன் விடுதியில் நடைபெற்றது.
மகாவலி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கமைவாக கரையோரப் பாதுகாப்பு கரையோர முல வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில் மட்டக்களப்புப் பிரிவில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டன.
வாவி மற்றும் கடற்கரைப் பிரதேசச்சூழல் மாசடைதல், அவற்றைப் பேணுதல் மற்றும் இச்செயல்பாடுகளின்னால் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் பற்றி ஆராயப்பட்டன. கரையோரம் பேணல் திணைக்களத்தின் சட்ட உத்தியோகஸ்தர் பாஞ்சலி பெர்ணான்டோ, கரையோரம்பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஏ.கோகுலதீபன், மட்டக்களப்பு, அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் யு.கெ. திசாநாயக்கா, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். -
0 Comments:
Post a Comment