26 Jul 2015

சடலம் ஒன்று மீட்பு

SHARE
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கீச்சான்பள்ளம் கிராமத்திலுள்ள வெற்றுக் காணியொன்றுக்குள் இருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை(26) காலை ஆணின் சடலமொன்றை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

கீச்சான் பள்ளம் கிராமத்திலுள்ள வெற்றுக்காணியொன்றுக்குள் சடலமொன்று கிடப்பதாக காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், அந்த சடலத்தை மீட்டு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டனர். குறித்த சடலம் காங்கேயனோடையைச் சேர்ந்த எம்.நஜிமுதீன்(44) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் கூறினர்.

 குறித்த நபர் நேற்றிரவு தனது வீட்டுக்கு செல்லாததால் அவரை அவரின் குடும்பத்தினர் தேடியதாகவும் இந் நிலையில், அவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.   
SHARE

Author: verified_user

0 Comments: