27 Jul 2015

இன்று முதல் கால் நடைகளுக்குரிய மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடை 
பண்ணையாளர்களின் நலன் கருதி கால்நடைகளுக்குத் தேவையான சகல விதமான மருந்து வகைகளையும், தும்பங்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள அமுத சுரபி பால் பதனிடும் நிலையத்தில் மொத்தமாகவும், சில்லறையாகாகவும் நியாய விலையில் இன்று திங்கட் கிழமை (27) முதல் பண்ணையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என போரதீவுப்பற்றுப் பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.


இதுவரை காலமும் இப்பிரதேசத்தில் கால் நடைகளுக்குரிய மருந்துகளைப் பெறுதாயின் இப்பிரதேச பண்ணையாளர்கள் கல்முனை, மருதமுனை, மட்டக்களப்பு, போன்ற மிகத் தூர இடங்களுக்குச் சென்றே மருந்துகளை அதிகம் செலவு செய்து பெற்று வந்துள்ளனர்.

பண்ணையாளர்களின் நலன் கருதி நேரம், பணம், தூரம் போன்றவறை;றை மீதப்படுத்தும் வகையிலும் உரிய பிரதேசத்தில் சேவையை வழங்கும் நோக்கில் இன்றிலிருந்து கால்நடைகளுக்கு ஏற்படும், மடியழற்சி, உண்ணிக்காய்ச்சல், பால்க்காய்ச்சல், போன்ற பல நோய்களுக்குமான, தேவையான சகல விதமான மருந்து வகைகளையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: