13 Jul 2015

போரினால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டம்.

SHARE
நோர்வே அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையில், மட்டக்களப்பில் அமைந்துள்ள  சமூகவள அபிவிருத்தி நிறுவனத்தின், போரினால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று திங்கட் கிழமை (13) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி பாலர் பாடசாலைக் கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கண்ணபுரம், இயைஞர் விவசாயத்திட்டம், மற்றும் களுமுந்தன்வெளி, ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு தையல் தலா ஒவ்வொரு இயந்திரங்களும், 21 பயனாளிகளுக்கு தலா ஒவ்வொரு, நல்லின கறவைப் பசுக்களும் வழங்கப்பட்டன.

நோர்வே அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையில் முதற்கட்டமாதக 11 லெட்டம் ரூபாய் செலவில் தற்போது இவ்வுதவிகள் வழங்கப்ட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் ( ஓகஸ்ட்) மேற்படி 3 கிராமங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படும் 6 பயனாளிகளுக்கு தலா ஒவ்வாரு, மலசலகூடமும்,  மேலும் 75 பயனாளிகளுக்கு நல்லின, ஆடு, மாடுகள், எனபனவும் 30 லெட்சம் ரூபால் செலவில் வழங்கப்படவுள்ளதாக மூகவள அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் இ.கண்ணதாசன், இதன்போது தெரிவித்தார்.

களுமுந்தன்வெளி வாழ்வாதார அபிவிருத்திக்குழுத் தலைவர் யோ.கிவேதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நோர்வே அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் வே.நாகேந்திரன், சமூகவள அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் இ.கண்ணதாசன், கிராசேவை உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இவ்வுதவிகளை வழங்கி வைத்தனர்.




















SHARE

Author: verified_user

0 Comments: