மக்களுக்கு இலவசமாக உதவிகள் கிடைக்கப் பெறுவதனால், மக்கள் சோம்பேறித்தன்மைக்குக் ஆளாகின்றனர் என நோர்வே அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் வே.நாகேந்திரன், தெரிவித்தார்
நோர்வே அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையில், மட்டக்களப்பில் அமைந்துள்ள சமூகவள அபிவிருத்தி நிறுவனத்தினால், போரினால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று திங்கட் கிழமை (13) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி பாலர் பாடசாலைக் கட்டடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
கிளிநொபச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், யாவவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனறாகலை போன்ற பகுதிகளில் நாம் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை மெற்கொண்டு வருகின்றோம்.
பல அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசாங்கத்தற்குத் தெரியாமல், மக்களுக்கு என்ன தேவை என விசாரித்துவிட்டு அவற்றைக் கொண்டு மக்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுவார்கள், ஆனால் அவற்றைப் பற்றிய எதுவித கண்காணிப்புக்களையும் மேற்கொள்வதில்லை. இதனால், மக்கள் தொடர்ந்தும் நிறுவனங்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்குத் தயாராகவே உள்ளனர். ஆனால் முன்னேற்றங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன.
இவ்வாறு மக்களுக்கு இலவசமாக உதவிகள் கிடைக்கப் பெறுவதனால், மக்கள் சோம்பேறித்தன்மைக்குக் ஆளாகின்றனர்.
ஆனால் நாம் எமது திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினூடாகத்தான் பயனாளிகள் தெரிவு செய்து உதவிகளை மக்களினதும், சமூகத்தினதும், ஒத்துழைப்புடன் வழங்குகின்றோம். மக்கள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பதற்குரிய காரணம் தங்கி வாழ்வதாகும்.
மக்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும், சமூக ரீதியான இயல்புகளும் வலுப்பெற வேண்டும். என்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதனூடாக மக்கள் வருடாந்தம் தமது வாழ்வாதாரத்தை முன்னோக்கிச் செல்ல வேண்டும், பிறரிடம், தங்கி வாழுநிலமையிலிருந்து விடுபட வேண்டும். எனவே மக்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற உதவிகளைப் பெற்றுக் கொண்டு தமது வருமானத்தைப் பெருக்க வேண்டும், வாழ்வில் முன்நேற்றமடைய வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment