13 Jul 2015

நாடாளுமன்றுக்கு 225 பேரைத் தெரிவு செய்யும் தேர்தலில் 777 பேர் போட்டி

SHARE
இலங்கை நாடாளுமன்றுக்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 225 உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுத் தேர்தலில் 777 பேர் போட்டியிடுகின்றனர்.
21 அரசியல் கட்சிகள், 15 சுயேட்சைக்குழுக்கள் தேர்தலில் போட்டியிடும் இத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறுகிறது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, உட்பட 21 அரசியல் கட்சிகள் தேர்தலில் தமது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: