மட்டக்களப்பு – களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உத்சவத்தினை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை இரவு பாற்குடப் பவனி நடைபெற்றது.
களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இப்பாற்குடப் பவனி பிரதான வீதி வழியாக சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்குச் சென்று மூல மூர்த்தியாகிய சிவசக்தி ஸ்ரீ முருகனுக்கும், வள்ளி தெய்வானைக்கும் பாலாபிஷேகம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment