மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கான காணி நடமாடும் சேவை நேற்று (16) வியாழக்கிழமை சித்தாண்டியில் நடைபெற்றது.
பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்த காணி நடமாடும் சேவையில் காணிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான மீளாய்வுகள், விசாரணைகள் நடைபெற்றன. மாகாண காணி ஆணையாளரது 2008-4 சுற்று நிருப்துக்கமைவாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 2772 பேருக்கான காணி நடமாடும் சேவையாக இது அமைந்திருந்தது.
இந்த நடமாடும் சேவையில் காணிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கான இரண்டாம் கட்ட விசாரணையாகவும் இது அமைந்திருந்தது. இந்த விசாரணையினை அடுத்து விபரங்கள் காணி ஆணையாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
சித்தாண்டி கலாசார மண்டத்தில் நடைபெற்ற நேற்றைய நடமாடும் சேவையில் ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பெரியவெட்டுவான், நவுண்டல்யமடு, குளுவினமடு, விற்பனமடு, வெள்ளையன்ட சேனை, யாவானை, ஈரளக்குளம் அலியா ஓடை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நடமாடும் சேவையில் பங்கு கொண்டனர்.

0 Comments:
Post a Comment