திருகோணமலை மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அடிகளாரை திருநிலைப்படுத்தும் நிகழ்வு இம்மாதம் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தற்போதைய ஆயர் கிங்ஸிலி சுவாமிப்பிள்ளை அடிகளாரின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அடிகளாரை திருகோணமலை ஆயராக நியமித்துள்ளார்.
பேராயர்- வணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சின்- பாப்பரசரின் பிரதிநிதி பியர்ரே நுய்யோன் வான்டொற் தலைமையில் நாட்டின் அனைத்து பாகங்களின் ஆயர்கள் கலந்துகொள்ள எதிர்வரும் 25ஆம் திகதி காலை 8.30 மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நாடுமுழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment