18 Jul 2015

ஏறாவூரில் மர்ஹூம் செயினுல் ஆப்தீன் வாவிக்கரை பூங்கா திறப்பு விழா

SHARE

 மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட ஆற்றங் கரையோரப் பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட "மர்ஹூம் செயினுல் ஆப்தீன் வாவிக்கரைப் பூங்கா திறப்பு விழா நேற்று (16) மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
முதலமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் ஏ.நாஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.

கெளரவ அதிதிகளாக உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்தெளபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரும் மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரதிச் செயலாளர் ராபி, ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள், மட்டக்கப்பு மாவட்ட முக்கியஸ்தர் பலரும் கலந்து கொண்டனர்.

15 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பூங்காவுக்கு “மர்ஹூம் செயினுல் ஆப்தீன் வாவிக்கரை பூங்கா ” என்று பெயர் சூட்டப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: