18 Jul 2015

புனித சிசிலியா பெண்கள் பாடசாலை சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

SHARE

மட்டக்களப்பு மாவட்ட சாரணிய சங்கத்தினால் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசியப் பாடசாலையில் சாரண இயக்கத்தில் இணைந்து கொண்ட 40 பெண் சாரணியர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் நடைபெற்ற, மகாத்மா காந்தி துருப்பு, அன்னை திரேசா துருப்பு, சீ.டப்ளியூ.டப்ளியூ.கன்னங்கரா துருப்பு, இந்திரா காந்தி துருப்பு ஆகிய அணிகளைக் கொண்ட புனித சிசிலியா பெண்கள் தேசியப் பாடசாலை சாரண அணிகளுக்கு சின்னஞ் சூட்டும் நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் ஈ.பி.ஆனந்தராஜா, முன்னாள் ஆணையாளர் எஸ்.தேவராஜன், உதவி ஆணையாளர்களான ஏ.குணரட்ணம், வி.பிரதீபன், ஐ.கிறிஸ்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர். சின்னஞ்சூட்டும் நிகழ்வினை பாடசாலையின் சாரண ஆசிரியை அருட்சகோதரி ஜே.கவிதா நடத்தி வைத்தார்.

அத்துடன், புனித சிசிலியா பெண்கள் தேசியப் பாடசாலைக்கு அண்மையிலுள்ள புனித மிக்கேல் கல்லூரி, ஆனைப்பந்தி ஆர்.கே.எம் மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் சாரண ஆசிரியைகளும், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு வலயத்துக்குள் அதி கூடிய பெண் சாரணியர்கள் இணைந்து கொண்டமை சிறப்பம்சமாகும் என்று வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: