பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை (10) அரசியல் கட்சி சார்பில் தர்மலிங்கம் கிருபாகரன் தலைமையில் முன்நிலை சோசலிசக் கட்சியும், இரண்டு சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை வரையில் 21 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாட்டில் வெள்ளிக்கிழமை 3 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. அதனையடுத்து கடந்த திங்கட்கிழமை இரண்டும் செவ்வாய்க்கிழமை 3 புதன்கிழமை ஒன்றும் நேற்று (10) வியாழக்கிழமை 11 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment