29 Jul 2015

ஐமசுகூ.வில் இணைந்தார் சிவகீதா பிரபாகரன்

SHARE

மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும், பீல் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீதா பிரபாகரன் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். 



கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள்
பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் இவர் கூட்டமைப்பில் இணைந்தார். 




இவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஐந்து முன்னாள் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர். 
SHARE

Author: verified_user

1 Comments:

Anonymous said...

நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624