இலங்கைத் தீவிலே நாங்கள் தேசிய இனம் எங்களால் தொடர்ந்தும் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ முடியாது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்கும் போது தான், எமது அடையாளங்களைக் காப்பற்ற முடியும் என்ற அறிவுபூர்வமான தீர்மானத்தின் அடிப்படையிலே இணைந்த வட கிழக்கு மாநிலத்தை நாம் கோரி நிற்கிறோம் என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
1833 ஆண்டு காலப் பகுதியில் 19 ஆயிரத்தி 52 சதுர கிலோ மீற்றராக இருந்த கிழக்கு மாகாணத்தின் பரப்பளவு தற்போது அரைவாசியாக குறைந்து 9 ஆயிரத்தி 803 சதுர கிலோ மீற்றராக சுருக்கப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் போன்றன கிழக்கு மண்ணை கபளீகரம் செய்துள்ளன. இந்த நிலையில் தான் நாங்கள் இணைந்த வடகிழக்கு பற்றி சிந்திக்கிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருக்கும் போது எம்முடைய மண்ணும் இன அடையாளங்களும் காப்பாற்றப்படும் என்ற அறிவுபூர்வமான தீர்மானத்தின் அடிப்படையில் வடகிழக்கு இணைந்த மாநிலத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்த சூழ்நிலையில் நாங்கள் வடக்கு கிழக்கு என பிரிந்திருக்க முடியாது அவ்வாறு பிரிந்திருப்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதாக அமையும்.
மட்டக்களப்பு மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள். கடந்த காலத்தில் எமது தேசியத்தை சிதைத்தவர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
அவர்களின் போலி பிரசாரங்களுக்கு எமது மக்கள் ஏமாந்து விடக் கூடாது, எனக் குறிப்பிட்டார்.
1 Comments:
நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்.
www.ganeshamoorthy.com
www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624
Post a Comment