30 Jul 2015

தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ போலி வாக்குறுதிகளை வழங்க மாட்டேன்

SHARE

தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ ஒரு உண்மையற்ற வாக்குறுதிகளை வழங்க மாட்டேன், வழங்கவும் முடியாது என, மூதூர் தேசியப் பட்டியல் விவாகரங்கள் தொடர்பில் கருத்து வௌியிடுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார். 

நேற்று இரவு (29) மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

வடக்கில் அஸ்மிசாலிஹூக்கு மாகாணசபை அங்கத்துத்துவத்தினை வழங்கினோம். கிழக்கில் முதலமைச்சர் விவகாரத்தில் விட்டுக் கொடுத்தோம். காரணம் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஏக பிரதிநிதிகள் என்பதனால் நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டோம். 

கட்சித் தலைவர்கள் பிளவுபட்டாலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும், என்றார். 

இப் பிரச்சாரக் கூட்டம் மூதூர் மக்களின் அதீத எதிர்பார்ப்பாக இருந்ததனால் கொட்டும் மழை மின்னல் என்று பாரமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் வாக்குறுதியை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். 

மூதூர் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நியாயமானது. இது நல்லதொரு ஆரம்பம். கட்சிகளுக்குள் பிளவுகள் வராமல் நாம் நடந்து கொண்டால் எமது கருமங்களை இலகுவாக வெல்லலாம். இவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்திருந்தல் சிறுபாண்மை சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும், இதனால் நீங்கள் அணைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். தேசியப் பட்டியலிலுள்ளவர்களின் பெயர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன, தற்போது அதனை வழங்க முடியாது என, ஆதரவாளர்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார். 

நான் முஸ்லிம் மக்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் மிடையில் ஊர் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை அது எனது நோக்கமும் இல்லை. 

தமிழ் - முஸ்லிம் உறவைப் பேணி பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்து வந்துள்ள நடவடிக்கைள் பல அவற்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்றார். ad
SHARE

Author: verified_user

0 Comments: