31 Jul 2015

சிறுபோக நெல் கொள்வனவு அடுத்த வாரமளவில் ஆரம்பம்

SHARE

திருகோணமலை மாவட்டத்தில் சிறு போக நெல் கொள்வனவு அடுத்த  வாரமளவில் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
ஒருவரிடம் இருந்து 2000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன் மாவட்டத்தில் முதல் கட்டத்தில் 5000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படவள்ளதாகவும் நெல்லை கொள்வனவு செய்வதற்காக மாவட்டம் தோறும் 09 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு ஒரு கிலோ 45 ரூபாவுக்கும், சம்பா ஒரு கிலோ 50 ரூபாவுக்கும், கொள்வனவு செய்யப்படவுள்ளது. தற்போது பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டுள்ள நெல் களஞ்சிய சாலைகளில் உள்ள நெற்கள் எடுக்கப்பட்டு நெல் சேகரிக்கும் வகையில் அவை வெற்று களஞ்சிய சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
SHARE

Author: verified_user

0 Comments: