20 Jul 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்கு பகிரங்க அழைப்பு.

SHARE

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்கு நான் இப்போது அக்கூட்டமைப்புக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். என நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கிருஸ்ணபிள்ளை சிவநேசன் (வெள்ளையன்) தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை (19) மாலை மட்டக்களப்பு – பெரிபோரதீவில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சி எடுத்தேன். அது எனக்கு தோல்வியைத் தந்தது தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியுடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

நான் கொள்கை, கொள்;கை என்று சொல்லி மக்களை ஏமாற்ற விரும்ப வில்லை, நான் ஏமாறுபவனுமல்ல, எனக்கு ஒரு கொள்ளையுண்டு,  எனது கொள்ளை மக்கள் நலம் சார்ந்தவையாகும், வருங்கால எமது சந்ததிகளின், நல்வாழ்வு சார்ந்தவையாக எனது கொள்மை அமைந்துள்ளது. 

கடந்த காலங்களில் எத்தனையோ முஸ்லிம் இளைஞர், யுவதிகள், வேலைவாய்ப்பு பொற்றிருக்கும்போது, தமிழ் இளைஞர், யுவதிகள் பொறாமைப் படுவதற்குரிய காரணங்களைச் சிந்திக்க வேண்டும், இவைகள் பற்றி எமது தமிழ் சமூகம், நினைத்துப் பார்க்க விவல்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு, தமிழ் மக்களை வழிநடாத்திய அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், இதுவரைகாலமும் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைககள் என்ன. அவர்கள், தொடர்ச்சியாக கொள்கை, கொள்கை, என்று தமிழ் மக்களாகிய எம்மை ஏமாற்றி வருகிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்கு நான் இப்போது அக்கூட்டமைப்புக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். முடிந்தால் அவர்கள் என்னிடம் விவாதிப்பதற்கு வரலம், நான் அவர்களுக்கு கொள்கை உரிமை, போன்ற விடையங்கள் பற்றி நன்கு, தெழிவு படுத்துவேன். எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேதலில் எமது தமிழ் மக்கள் அனைவரும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

SHARE

Author: verified_user

0 Comments: