19 Jul 2015

ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பு

SHARE
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் களியோடை ஆற்றில், நேற்று (18) மீட்க்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று 7/4 பிரிவைச் சேர்ந்த 34 வயதுடைய மகேஸ்வரன் சதீஸ்குமார் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த வியாழக்கிழமை மாலை சந்தைக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை என நேற்றைய தினம்(18) பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு குறித்தநபரின் தாயார் சென்றுள்ளார். இதன்போதே, மீட்க்கப்பட்ட சடலம் தொடர்பிலான தகவலை பொலிஸார் தெரிவித்ததையடுத்து, உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார், மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.   
SHARE

Author: verified_user

0 Comments: