மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று சனிக்கிழமை (18) ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக் கிழமை (19) நிறைவடைந்தது.
களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ந.தசரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் பட்டிப்பளை, வெல்லாவெளி, மற்றும் களுவாஞ்சிகுடி, பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட 20 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.
அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்களைக் கொண்ட இம்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு, பட்டிப்பளைப் பிரதேசத்திலிருந்து கலந்து கொண்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும், வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கலந்து கொண்ட பழுகாமம் சூட்டிங் ஸ்ட்டார் விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டன.
இதில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் 45 ரண்களைப் பெற்று முதலிடத்தையும், பழுகாமம் சூட்டிங் ஸ்ட்டார் விளையாட்டுக் கழகம் 38 ரண்களைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இப்போட்டியின் இறுதி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தார்.
0 Comments:
Post a Comment