9 Jul 2015

மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் விபரம்.

SHARE

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் தெரிவானது இழுபறி நிலை ஏற்பட்டபோதும் மாவட்டத்தில்
தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசன், ரெலோ சார்பாக மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும், புளோட் சார்பாக ச.வியாழேந்திரன் (அமல்) ஆசிரியரும், வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தில் தமிழரசு கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் புதுமுக வேட்பாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி, வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்க்குடி ஆகிய பிரதேசங்களுக்கு உதவி அரசாங்க அதிபராகவும், மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளராகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவித்தி திட்ட மட்டக்களப்பு மாவட்ட திட்டப்பணிப்பாளரும் (நெற்டெப்) கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக தற்பொழுது வரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்ற  சித்தாண்டியைச் சேர்ந்த சி.சாமித்தம்பியும்  (எல்.எல்.வி) பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசனும் புளோட் சார்பாக ச.வியாழேந்திரன் (அமல்) ஆசிரியரும்   தெரிவு செய்யப்பட்டுள்ளா
SHARE

Author: verified_user

0 Comments: