திருக்கோவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு மேற்சற் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் காடுகள் அளிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளுவதை தடுத்து நிறுத்தற்கோரி பிரதேச கால்நடை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் வெள்ளிக் கிழமை (26) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அம்பாரை மாவட்டத்திற்கேன 1976 ஆம் ஆண்டு வர்த்தக மாணி அறிவித்தலின் பிரகாரம் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட மேற்ச்சற்தரை காணியில் விவசாயங்களை மேற்கொள்வதால் கால் நடைகளை மேய்ப்பதற்கு இடமின்றி கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய கஸ்ரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தங்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரக் கோரியே இந்த ஆர்ப்பாட்டத்திரனை முன்னெடுத்திருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கால்நடை பால் உற்பத்தியாளர் சங்கததின் தலைவர் அ.முருகன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
எமது கால்நடைகளை வளர்ப்பதற்காக அம்பாரைமாவட்த்தில் வாழும் மூவின மக்களுக்கும் பொதுவாக இக்கானி 1976 ஆம் ஆண்டு விசேட வர்த்தகமானி அறிவித்தலின் பிரகாரம் வழக்கப்பட்டது. ஆனால் இக் காணி தற்போது காடுகள் அழிக்கப்பட்டு விவசாயத்திற்கா பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் எமது கால்நடைகளை வளப்பதற்கு நீர்இ மற்றும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன். விவசாயத்தின் போது பயன்படுத்தப்படுகின்ற கிருமிநாசினிகள் நீருடன் கலப்பதால் கால் நடைகள் தினமும் இறக்கின்ற நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு தினமும் எமது ஜீபனோபாயத் தொழில் அழிவடைந்து கொண்டு வருகின்றது எனவே எமது நிலையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்து தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment