14 Jul 2015

திருமலையில் 11 அரசியல் கட்சிகளும் 06 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல்

SHARE

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இதுவரை 11 அரசியல் கட்சிகளும் 06 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளன.
வேட்புமனுத்தாக்கலை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 13 பல அரசியல் கட்சிகள் தமக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஜக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல கட்சிகள் இவற்றுள் அடங்கும். ஜக்கிய தேசிய கட்சி முன்னாள் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக் தலைமையிலும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசன்த புஞ்சி நிலமே தலைமையிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.
SHARE

Author: verified_user

0 Comments: