யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் 1.5 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப் பட்டுள்ள அரிசியாலை திறந்து ஞாயிற்றுக் கிழமை(26) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப் பட்டுள்ளது.
போரதீவுப் பற்று பிரதேச அபிவிருத்திப் புணர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் க.தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதான முறைப்படி பால் காய்ச்சி திறந்து வைக்கப்பட்டது.
இப்பிரதேசத்திலிருந்து பெறப்படும் நெல் அனைத்தையும் கொள்வனவு செய்து இவ்வரிசியாலையைப் பயன்படுத்தி நல்லின சோற்றரிசி, உற்பத்தி செய்யப்படவுள்ளதோடு, பல விதைகளற்ற நல்லின விதை நெல் சுத்திகரிப்பும், மேற்கொள்ளத் திட்ட மிடப்பட்டுள்ளதாக, போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திப் புணர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் க.தணிகாசலம் தெரிவித்தார்.
இப்பிரதேச மக்களுக்கா வேண்டி ஐரோப்பிய ஒன்றியம் மானியமாக நிருமாணித்துத் தந்துள்ள இப்பாரிய செயற்றிட்டத்தில் விதவைகள் உட்பட பல தரப்பட்ட நபர்களுக்கும் வேலை வாய்ப்பையும், ஏற்படுத்த தீர்மாணித்துள்ளதாகவும், இதன் மூலம் இப்பிரதேச விவசாயிகள் மாத்திரமின்றி பலரும் நன்மையடைவார்கள் எனவும் க.தணிகாசலம் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment