16 Jun 2015

கூட்டுறவு அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்…

SHARE
கிழக்கு மாகாண சபையின் கூட்டுறவு அபிவிருத்தியினை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அமைச்சின் செயலாளர் சிவநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் துரைராஜசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் மாகாண கூட்டுறவு பணிப்பாளர் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள், உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கூட்டுறவு திணைக்களத்தின் குறைபாடுகள் மற்றும் பரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்து மாகாண மட்டத்தில் அபிவிருத்தி அடையச் செய்வது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.









SHARE

Author: verified_user

0 Comments: