மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் நல்லின நடைகளின் இன விருத்திகளையும், கால்நடை உற்பத்திப் பொருட்களையும் அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று புதன் கிழமை (17) தும்பங்கேணி அமுதசுதபி பால் பதனிடும் நிலையத்தில் போரதீவுப் பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்திற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்குமிடையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் போரதீவுப் பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகத்தினர், உலகதரிசன நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.சிறி, அக்ரெட் நிறுவனத்தின் இணைப்பாளர். இ.கஜேந்திரன், மாம்ஹெமி நிறுவனத்தின் இணைப்பாளர், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
போரதீவுப் பற்று மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்தினூடாக இப்பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நன்மை கருதி நல்லின பசுமாடுகள், மற்றும் ஆடுகள், போன்றவற்றின் இனவிருத்தி, மாதிரி கோழிப் பண்ணைகளை ஊக்குவித்தல், விலைக்கழிவுடன் நல்லின காளை மாடுகளை பண்ணையாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் போன்ற விடையங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
முதற்கட்டமாக இதில் இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்படும் 10 கால் நடை பண்ணையாளர்களுக்கு தலா ஒவ்வொரு நல்லின காளை மாடுகள் 10000 ரூபா விலைக்கழிவுடன் கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக பெற்றுக கொடுக்கவுள்ளதாக, போரதீவுப் பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment