கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எமது பட்டிப்பளைப் பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அவையாவன யுத்தம், மதுபானக்கடை அதிகரிப்பு, கலாசார சீரழிவு, வறுமை, இடம்பெயர்வு, இவ்வாறான பிரச்சனைகள் பட்டிப்பளைப் பிரதேச மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும், இவ்வேளையில், இவை எல்லாவற்றுக்கும் மேலாக எமது பிரதேசத்திலுள்ள மக்களின் குடி நீரையும், நாசப்படுத்தும் வகையில், இறால் வளர்ப்பதற்கு பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய முன்னாள் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணத்தினால் அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது.
என தெரிவித்து பட்டிப்பளைப் பிரதேசத்திலுள்ள 17 பொது அமைப்புக்கள் கையொப்பமிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்காக வேண்டி இன்று புதன் கிழமை தற்போது கடமைபுரிந்து வரும், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தியிடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
இதன் பிரதிகள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு சுற்றாடல் அதிகாரசபை, ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…..
இத்திட்டத்தினை இப்பிரதேச பொதுமக்களாகிய நாம், மிகவும் வன்மையாகக் கண்டி;கின்றோம். எந்தக்காரணம் கொண்டும் எமது பிரதேசத்தில், இறால் வளர்க்க அனுமதிக்க மாட்டோம். அரசாங்க அதிபராகிய உங்களிடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்வது இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம். இதற்கு முன்கூட்டியே அனுமதி வழங்கியிருந்தால், அவர்களை உடனடியாக இரத்துச் செய்யவும்.
பூர்வீக காலம் தொடக்கம், மகிழடித்தீவு, முதலைக்குடா, தாழையடித்தெரு, பண்டாரியவெளி, படையாண்டவெளி. ஆகிய கிராமங்களில், நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களைக் குடியெழுப்ப வைக்காதீர்கள் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில், உழைப்பதற்காக எங்களைக் கொல்ல வேண்டாம். இதற்கு மிக விரைவில் தீர்வு காணா விட்டால். எமது போராட்டம் தொடரும். ஜனாதிபதி வரைச் செல்வோம். தயவு செய்து இத்திட்டத்தை நிறுத்தி விடும்படி பணிவாக கேட்டுக் கொள்கின்றோம்.
இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும், ஏற்படும் தீமைகளாவன
கரையோர கிராம மக்களாகிய மகிழடித்தீவு, முதலைக்குடா, தாழையடித்தெரு, பண்டாரியவெளி, படையாண்டவெளி, ஆகிய கிராம மக்களின் குடிநீர் உவர்த் தன்மையாகிவிடும்.
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வயல் நிலங்கள் வேளாண்மை செய்ய முடியாதபடி, உவர் நிலங்களாக மாறிவிடும்.
இங்கு கண்டல் தாவரம் அழிக்கப் படுவதனால சுற்றாடல் மாசடையும்,
அரியவகையான மீனினங்கள் அழிவடையும்
சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய்விடும்.
என அந்த மகஜரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment