மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் “தென்றல்” எனும் மாத சஞ்சிகை மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர் அருள் செல்வநாயகத்தின் குடும்பத்தாருடன் இணைந்து அருள் செல்வநாயகத்தின் நினைவாக மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தவுள்ளதாக தென்றல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க.கிருபாகரன் வௌ;வாய்க் கிழமை (16) அறிவித்துள்ளார்.
“இலக்கிய உலகில் அருள்செல்வநாயகத்தின் படைப்புக்கள்” எனும் தலைப்பின் கீழ் இக் கட்டுரைப் போட்டியை இவ்வருடத்திலிருந்து தொடர்ந்து, வருடா-வருடம் நடாத்தப்படவுள்ளது.
இப் போட்டியில் பாடசாலைகளில் தரம் 10ஆம், 11ஆம், 12ஆம், மற்றும், 13ஆம், தரங்களில், கல்வி கற்கும் இலங்கையின் எப்பாகத்திலும் அமைந்துள்ள சகல தமிழ் மொழி மூலமான பாடசாலை மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
எழுதி அனுப்பி வைக்கப்படும் கட்டுரைகள் 300 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
கட்டுரைகள் புள்ஸ்கப் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டு, பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கட்டுரைகளை தென்றல், 44ஃ1 பளைய கலமுனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு என்ற முகவரிக்கு, எதிர் வரும், ஜுலை-30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்போட்டியில் வெற்றியீட்டுவோருக்கு முதல் பரிசாக 3000ரூபாவும், இரண்டாம் பரிசாக 2000ரூபாவும், மூன்றாம் பரிசாக 1000ரூபாவும், வழங்கப்படும். அத்தோடு ஆறுதல் பரிசாக ஐவருக்குத் தலா 500ரூபா வீதம் வழங்கப்படுவதோடு தெரிவு செய்யப்படும் அனைவருக்கும் எழுத்தாளர் அருள் செல்வநாயகம், சுவாமி விபுலானந்தரைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய 1000 ரூபாய் பெறுமதியான புத்தகம் ஒவ்வொன்றும் வழங்கப்படும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் கட்டுரைகள்; “தென்றல்” சஞ்சிகயில் பிரசுரிக்கப்படும்.
வெற்றியீட்டுபவர்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறும். என்ற நிபந்தனைகளுக்கமைவாக இக்கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளதாக தென்றல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment