மட்.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் பொ.நேசதுரையின் கோரிக்கைக்கிணங்க மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசனின் ஏற்பாட்டில் குறித்த வித்தியாலய மாணவர்களுக்கு விசேட இலவச மருத்துவப் பரிசோதனை மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்து கடந்த 04 வாரங்களாக இடம்பெற்று நேற்று திங்கட் கிழமையுடன் (15) நிறைவு பெற்றது.
இதன்போது 600க்கு மேற்பட்ட மாணவர்கள் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், பாரிய நோய்கள் உள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மட்.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment