24 May 2015

மட்டு மாவட்டத்தில் வேலைகளை மேற்கொள்வதற்கு சில அதிகாரிகள் தடையாக இருக்கின்றார்கள் - பிரதியமைச்சர் அமீரலி

SHARE

உலகத்திலே சமூகமாற்றம், கல்வி மாற்றம், போன்றன இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சில வேலைகளை மேற்கொள்வதற்கு சில அதிகாரிகள் தடையாக இருந்து வருகின்றமை கவலைக்குரிய விடையமாகும்.  
என சமூர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள புதிய பேரூந்து தரிப்பிடத்திற்குரிய அடிக்கல் இன்று ஞாயிற்றுக் கிழமை (24) நட்டி வைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி கிராம தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டி வைத்துவிட்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…


அபிவிருத்திகள் அரசியல் நேக்கத்திற்காக மேற்கொள்ளப் படவில்லை எனக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மீது ஒரு தெழிவான பார்வை இருக்கின்றது. இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு மனித நேயம் கொண்டவன் என்ன ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிபோதை ஒழிக்கப்படல் வேண்டும், வறுமையைப் போக்க வேண்டும், என்ற அடிப்படை விடையத்தில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

இந்த மாவட்டத்திலே இடம்பெற்ற போராட்டங்களும், சுனாமித் தாக்கமும் எமது மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டுச் சென்றுள்ளன. எனவே இவற்றிலிருந்து எமது மக்களை விடுபடச் செய்ய வேணடும்மெனில் இனவேறுபாடுகளுக்கு அப்பலிருந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். 


தற்போதைய நிலையில் இலங்கையிலே குடிபோதையிலே முதலிடம் பெறுகின்ற நிலைக்குச் எமது மட்டக்களப்பு மாட்டம் சென்றுள்ளது. இச்செய்தியானது. மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏழைகள், வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், வறுமை வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற செய்தி எடுத்தியம்பி நிற்கின்றது.  எனவே இவ்வாறான விடையங்கைளக் கருத்தில் கொண்டு அரசில் தலைவர்கள் ஒன்றிணைந்து இதுபற்றி சிந்தித்து செயற்பட வேண்டும். 

வறுமையினை ஒழிப்பதற்காக சமூத்தி பயனாளிகளை மையப்படுத்தி அம்பாந்தோட்டை மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ள சமூர்தி பயனாளிகளுக்கு 2.7 வீத்திற்கும்  குறைந்த வட்டி வீத்தில், ஒரு லெட்சம் ரூபாய் வரைக்கும், கடன் வழங்கும்  ஒரு வேலைத் திட்டத்தினை முன்நெடுத்துள்ளோம். ஆனாலும் இதற்கும் சில அதிகாரிகள் தடையாக இருந்து வருகின்றார்கள். 

கடந்த காலங்களில் எமது பகுதிகளில் பல அமைப்புக்கள் அதிக வட்டி வீத்திற்கு கடன்களை வழங்கிவிட்டு பின்னர் அதனை மக்கள் மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியில் இந்த மாட்டத்திலுள்ள மக்கள் அனைவருக்கும், அனைத்து வசத்தி, வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறல் வேண்டும். இந்நிலையில் எமது மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க வேண்டும், வறுமை ஒழியவேண்டும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். 

உலகத்திலே சமூகமாற்றம், கல்வி, மாற்றம், போன்றன இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திம் சில வேலைகளை மேற்கொள்வதற்கு சில அதிகாரிகள் தடையாக இருந்து வருகின்றமை கவலைக்குரிய விடையமாகும்.  

தமிழ் மக்கள் இக்கால கட்டத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் அண்மையில் புங்குடிதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியா என்கின்ற மாணவியின் விடையத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ துக்கி எடுத்துக் கொண்டு அரசியல் மேற்கொள்கின்றார் ஏன்றால் இவ்வாறான  காலகட்டத்தில் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களும்,  மிகவும் நிதானத்துடனும், விழிப்புடனும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: