மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் தூர்ந்து போய் காணப்படும் தபால் நிலையக் கட்டடத்தை அகற்றிவிட்டு இவ்வருட இறுத்திக்குள் மூன்றரைக் கோடி ரூபாய் செலவில் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட நவீர தரமுடைய புதிய தபால் நிலையம் ஒன்றை அமைத்துத் தருவேன் என சமூர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி தபால் நிலையக் கட்டடம் கடந்த 20 வருடத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் தற்போது வரைக்கும் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகின்றது.
இன்று ஞாயிற்றுக் கிழமை (24) களுவாஞ்சிகுடிக்கு விஜயம் செய்த சமூர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் கவனத்திற்கு களுவாஞ்சிகுடி தபால் நிலையத்தின் தற்போதைய நிலை பற்றி களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையிலான குழுவினர் கொண்டு வந்தனர்.
உடன் தபால் நிலையம் அமைந்திருக்கும் இடத்தினைப் பார்வையிட்டு விட்டு களுவாஞ்சிகுடி கிராம அபிவிருத்திக் குழுவிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விஜயத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவும் கலந்து கொண்டிருந்தார்.
0 Comments:
Post a Comment