மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள புதிய பேரூந்து தரிப்பிடத்திற்குரிய அடிக்கல் இன்று ஞாயிற்றுக் கிழமை (24) நட்டு வைக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி கிராம தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செவ்லராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்(ஜனா), ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) மா.நடராசா, இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண முகாமையாளர் ஏ.எல்.சித்திக், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், உட்பட கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் 30 லெட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இப்புதிய பேரூந்து தரிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் சிறியதொரு கொட்டகையில் பேரூந்து தரிப்பிடம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment