8 May 2015

கூரைமீது ஏறி இரு கைதிகள் உண்ணாவிரதம்

SHARE
மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறி இரு கைதிகள் உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராவார். மற்றவர் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்களை பதுளை மற்றும் மொணராகலை சிறைச்சாலைகளுக்கு இடம் மாற்றுவதை கண்டித்தே உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கந்தசாமி புஸ்பராசா, கதிரவன் கபிலன் ஆகிய கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை அல்லது மாவட்ட நீதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறும் இவர்கள் கோரிக்கை விடுப்பதாகவும் சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த கைதிகளுக்கு இன்று கல்முனை உயர்நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: