8 May 2015

தேசிய உற்பத்தி திறன் செயகத்தினால் திருமலையில் செயலமர்வு

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் செயலமர்வு இன்று (06) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய உற்பத்திதிறன் போட்டிக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் நடைமுறைகள் தொடர்பாக இதன்போது உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த விளக்கங்கள் மாவட்டத்தில் உள்ள அரச தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது. தேசிய உற்பத்தி திறன் போட்டியில் பங்கு பற்ற வழி சமைப்பதே இதன் நோக்கமாகும். வளவாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரி மொழி பெயர்ப்பாளர் ஜ.எச்.மாக்கார் கலந்து கொண்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும், பிரதேச செயலகம், குச்சவெளி பிரதேச செயலகம், மற்றும் சென்மேரிஸ் கல்லூரி என்பன வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: