இலங்கை
அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அவுஸ்திரேலியாவில்
இடம்பெறும் பிக் பாஷ் லீக் அவுஸ்திரேலிய உள்ளுர் அணியான கிரிக்கெட்
போட்டியில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமார் ஹொபேர்ட் அணிக்காக 2015 மற்றும்
2016 ஆம் ஆண்டு என இரு வருடங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு கையெழுத்திட்டார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League)
கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணிக்காக
விளையாடவுள்ள சங்கக்காரா கூறுகையில், பிக் பாஷ் லீக் போட்டி ஒரு உலகத்தரம்
வாய்ந்த போட்டியாகும். இவ்வாறான போட்டிகளில் நேரத்தை அதிகம் செலவிட நான்
விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஹொபேர்ட் ஹரிக்கன் அணியின்
பயிற்றுவிப்பாளர் டேமின் ரைற் கருத்து தெரிவிக்கும் போது சங்கக்காரா
இவ்வணியில் இணைந்துள்ளமையானது ஹார்பட் ஹரிக்கன்ஸ் அணிக்கு மட்டுமன்றி பிக்
பாஷ் லீக் அணிக்கே பெருமைக்குரியதொரு விடயமாகும் என தெரிவித்துள்ளார்.
இவ்வருட உலகக்கிண்ணப் போட்டியுடன் ஒரு
நாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற சங்கா, 130 டெஸ்ட் போட்டிகள், 404 ஒரு
நாள் போட்டி, 56 டி ருவன்டி சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக
விளையாடியுள்ளார்.
0 Comments:
Post a Comment