23 May 2015

தேசிய இளைஞர் தினம் கொண்டாடப் படவுள்ளது.

SHARE

இன்று சனிக்கிழமை (23) தேசிய இளைஞர் தினம் கொண்டாடப் படடுகின்றது. இதன் பிரதான நிகழ்வு மஹரகமயிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தiலைமையில் இடம்பெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

இன்று கொண்டாடப் படவுள்ள தேசிய இளைஞர் தினத்தில் பங்கெடுப்பதற்காக வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 50 இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ளவுள்ளவுள்ளனர், இவர்களில் தெரிவு செய்யப்பட்ட சில இளைஞர் யுவதிகளின் திறமைகளைப் பாராட்டி விருதுகளும் வழங்கப்படவுள்ளதாகவும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் மேலும் தெரிவித்தார

SHARE

Author: verified_user

0 Comments: