3 May 2015

யானைக் கூட்டத்தினால் வீடு உட்பட பயன்தரும் மரங்களும் சேதம்

SHARE
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை (01) இரவு புகுந்த காட்டுயானைகள்    வீடு உட்பட, பயன்தரும் மரவகைகளுக்கும் பலத்த சேதத்தினை ஏற்படுத்தி சென்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக  சேதத்திற்கு உள்ளான விட்டு உரிமையாளர் பா.லோகநாதன் தெரிவிக்கையில்

வெள்ளிக் கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் எங்களது வீட்டின் பின்புறம் மரம் முறியும் சத்தம் கேட்டது வெளியில் வந்து வெளிச்சத்தினை செலுத்தி பார்த்தேன் நான்கு யானைகள் எமது வீட்டு எல்லைக்கு உட்பட்ட தென்னை மரங்கள், பப்பாசிமரம் போன்றவற்றை முறித்துக் கொண்டு நின்றன.

நாங்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி அயலிலுள்ள வீட்டுக்கு சென்று விட்டோம் இதன் பின்னர் அந்த யானைக்கூட்டம் எமது வீட்டையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. இன்றுடன்  இரண்டு தடவைகள் எனது வீட்டினை இவ்வாறு காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. என அவர் தெரிவித்தார்.

இதன் போது வீட்டின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஆறு தென்னை மரங்களும், மற்றும் ப்பாசி மரம் ஒரு மூட்டை விதைநெல்லும் இதன் போது சேதத்திற்கு உள்ளாகியதாக வீட்டு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: