19 Apr 2015

பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

SHARE
கிழக்கில் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் பரிசளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை (17) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.வேல்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், கிராம பெரியோர்கள், கிராம பொது  அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  பட்டிருப்புக் கல்வி வலயத்திலிருந்து  கடந்த வருடம் நடைபெற்ற  5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த 26 மாணவர்களுக்கும், கல்விப் பொதுத்தர சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற 20 மாணவர்களுக்கும், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான 35 மாணவர்களுக்கும், பரிசில்கள் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப் பட்டனர். 









SHARE

Author: verified_user

0 Comments: