19 Apr 2015

சிக்கனமும் சேமிப்பு ஒரு அமைப்பு ரீதியாக உருவாகுமாயின் தனிநபர் மாத்திரமல்ல அந்த சமூகம் சார்ந்த கிராமமே நிற்சயமாக வளர்ச்சியடையும்.

SHARE
நாங்கள் தேவையற்ற விடயங்களிலே போதையாளர்களாக இருக்கின்றோம், அவற்றில் இருந்து விடுபட்டு நல்ல சிந்தனையாளர்களாக உருவாக வேண்டும் என பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜிவநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - குருமண்வெளி சிக்கனக் கனடனுதவுக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பரிசழிப்பு விழா குருமண்வெளி சிக்கனக் கனடனுதவுக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்….

நாங்கள் இவ்வலகிலே தேவையற்ற விடயங்களில் போதையாளர்களாக இருக்கின்றோம்,  அவற்றிலிருந்து நிற்சயமாக விடபட வேண்டும் அவற்றில் இருந்து விடபடுவதாக இருந்தால் கட்டாயம்  வீண்விரயங்களை தவிர்க்கின்ற சிந்தனை எங்களிடம் உருவாக வேண்டும். வீண்விரயங்கள் தடுக்கப்படுகின்ற போது அங்கு சிக்கனம் உருவாகுகின்றது அந்த சிக்கனம் உருவாகின்ற போது எங்களிடம் சேமிப்பு இயல்பாகவே உருவாகின்றது.

இதனால் நாங்கள் எங்களது எதிர்கால வாழ்க்கைக்கான தொடர் திட்டமிடுதலை அனைவரும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இந்த நிலமையை உருவாக்க நாங்கள் தன்னந்தனிமையாக சிந்தனையை உருவாக்க முடியாது. பலருடன் கூடி சிந்திக்கின்ற போது அந்த சிந்தனை மேலும் பரிணாமம் அடைகின்றது. சிக்கனமும் சேமிப்பு ஒரு அமைப்பு ரீதியாக உருவாகுமாயின் தனிநபர் மாத்திரமல்ல அந்த சமூகம் சார்ந்த கிராமமே நிற்சயமாக வளர்ச்சியடையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

அதுமாத்திரமின்றி இந்த சிக்கனக் கடனுதவு கூட்டுறவு சங்கமானது சேமிப்பும், சிக்கனத்தினை உருவாக்குதலுடன் மாத்திரமல்லாது. கல்வி கற்கின்ற சிறார்களுக்கும் உதவிபுரிந்து கல்விப் பணியாற்றுவதையிட்டு நான் மிகவும் பெருமை அடைகின்றேன்.

இவ்வாறான கல்விப் பணியின் ஊடாக எமது கிராமமொன்று முன்னேறுவது கண்டு புகழாங்கிதம் அடைவதுடன் அதிலும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட இந்த கிரமத்தில் இவ்வாறானதோர் பணியாற்றும் சங்கத்தினருக்கும் அதுசார்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: